இதில் காந்தங்களின் வகைகள், திசைகாட்டும் பண்பு, காந்தப்புலம் மற்றும் காந்தங்களின் பயன்கள் தொடர்பான வினாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
1. காந்தங்களின் கண்டுபிடிப்பு (Discovery of Magnets)
காந்தம் முதன்முதலில் மக்னீசியா (Magnesia) என்ற இடத்தில் கண்டறியப்பட்டது.
இயற்கையில் கிடைக்கும் காந்தக் கற்கள் மேக்னடைட் (Magnetite) என்று அழைக்கப்படுகின்றன. இவை ஒரு இயற்கை காந்தம் (Natural Magnet) ஆகும்.
மாலுமிகள் திசையறிய முதன்முதலில் பயன்படுத்திய காந்தக் கற்கள் திசைகாட்டும் கற்கள் (Lodestones) எனப்பட்டன.

2. காந்தங்களின் வகைகள் (Types of Magnets)
இயற்கை காந்தங்கள்: இயற்கையில் கிடைக்கும் காந்தங்கள் (எ.கா: மேக்னடைட்). இவை நிலையானவை மற்றும் வலிமை குறைந்தவை.
செயற்கை காந்தங்கள்: மனிதர்களால் உருவாக்கப்பட்ட காந்தங்கள். இவை பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன:
சட்டை காந்தம் (Bar Magnet)
குதிரை லாட காந்தம் (Horse-shoe Magnet)
வளைய காந்தம் (Ring Magnet)
ஊசி காந்தம் (Needle Magnet)
3. காந்தப் பொருட்கள் மற்றும் காந்தமில்லாப் பொருட்கள்
காந்தப் பொருட்கள்: காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருட்கள். (எ.கா: இரும்பு, கோபால்ட், நிக்கல்).

காந்தமில்லாப் பொருட்கள்: காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருட்கள். (எ.கா: மரம், காகிதம், பிளாஸ்டிக், கண்ணாடி).
4. காந்தத்தின் பண்புகள் (Properties of Magnets)
ஈர்ப்பு விசை: காந்தத்தின் ஈர்ப்பு விசை அதன் முனைகளில் (Poles) மிக அதிகமாக இருக்கும்.
துருவங்கள்: ஒரு காந்தத்திற்கு எப்போதும் இரண்டு துருவங்கள் உண்டு: வட துருவம் (N) மற்றும் தென் துருவம் (S).
திசைகாட்டும் பண்பு: தடையின்றித் தொங்கவிடப்பட்ட காந்தம் எப்போதும் வடக்கு - தெற்கு திசையிலேயே ஓய்விற்கு வரும்.
ஈர்ப்பு மற்றும் விலகல்:
ஓரினத் துருவங்கள் (N-N, S-S) ஒன்றை ஒன்று விலக்கும்.
வேரினத் துருவங்கள் (N-S) ஒன்றை ஒன்று ஈர்க்கும்.
5. காந்த ஊசிப் பெட்டி (Magnetic Compass)
இது திசையறியப் பயன்படும் ஒரு கருவி.
இதில் ஒரு சிறிய காந்த ஊசி மைய அச்சில் தடையின்றிச் சுழலும் வகையில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஊசி எப்போதும் வடக்கு திசையைக் காட்டும்.
6. காந்தப் பண்புகளை இழத்தல் (Loss of Magnetism)
ஒரு காந்தம் கீழ்க்கண்ட செயல்களால் அதன் காந்தத்தன்மையை இழக்கும்:
சுத்தியால் தட்டுதல் (Hammering).
வெப்பப்படுத்துதல் (Heating).
உயரத்திலிருந்து கீழே விழுதல் (Dropping).
7. மின்காந்த மிதவை இரயில் (Maglev Train)
இவை காந்தத்தின் ஈர்ப்பு மற்றும் விலகல் பண்புகளைப் பயன்படுத்தி இயக்கப்படுகின்றன.
இந்த இரயில்கள் தண்டவாளத்தில் ஒட்டாமல் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் மிதந்து செல்லும், எனவே இவற்றில் உராய்வு விசை (Friction) மிகக் குறைவாக இருக்கும். இது 'பறக்கும் இரயில்' என்றும் அழைக்கப்படுகிறது.
8. பாதுகாப்பு மற்றும் சேமிப்பு
காந்தங்களை எப்போதும் அவற்றின் வேரினத் துருவங்கள் ஒன்றை ஒன்று எதிர்நோக்கி இருக்குமாறு சோடிகளாக வைக்க வேண்டும்.
அலைபேசி, கணினி மற்றும் ஏடிஎம் கார்டுகளுக்கு அருகில் காந்தங்களை வைத்தால் அவை பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் ஏடிஎம் கார்டுகளில் தகவல்களைச் சேமிக்க காந்தப்பட்டைகள் (Magnetic strips) பயன்படுத்தப்படுகின்றன.Zeal study TNTET 6th Science Term 3 Unit 1 Quiz - Magnetism
4. காந்தத்தின் பண்புகள் (Properties of Magnets)
ஈர்ப்பு விசை: காந்தத்தின் ஈர்ப்பு விசை அதன் முனைகளில் (Poles) மிக அதிகமாக இருக்கும்.
துருவங்கள்: ஒரு காந்தத்திற்கு எப்போதும் இரண்டு துருவங்கள் உண்டு: வட துருவம் (N) மற்றும் தென் துருவம் (S).
திசைகாட்டும் பண்பு: தடையின்றித் தொங்கவிடப்பட்ட காந்தம் எப்போதும் வடக்கு - தெற்கு திசையிலேயே ஓய்விற்கு வரும்.
ஈர்ப்பு மற்றும் விலகல்:
ஓரினத் துருவங்கள் (N-N, S-S) ஒன்றை ஒன்று விலக்கும்.
வேரினத் துருவங்கள் (N-S) ஒன்றை ஒன்று ஈர்க்கும்.
5. காந்த ஊசிப் பெட்டி (Magnetic Compass)
இது திசையறியப் பயன்படும் ஒரு கருவி.
இதில் ஒரு சிறிய காந்த ஊசி மைய அச்சில் தடையின்றிச் சுழலும் வகையில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஊசி எப்போதும் வடக்கு திசையைக் காட்டும்.
6. காந்தப் பண்புகளை இழத்தல் (Loss of Magnetism)
ஒரு காந்தம் கீழ்க்கண்ட செயல்களால் அதன் காந்தத்தன்மையை இழக்கும்:
சுத்தியால் தட்டுதல் (Hammering).
வெப்பப்படுத்துதல் (Heating).
உயரத்திலிருந்து கீழே விழுதல் (Dropping).
7. மின்காந்த மிதவை இரயில் (Maglev Train)
இவை காந்தத்தின் ஈர்ப்பு மற்றும் விலகல் பண்புகளைப் பயன்படுத்தி இயக்கப்படுகின்றன.
இந்த இரயில்கள் தண்டவாளத்தில் ஒட்டாமல் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் மிதந்து செல்லும், எனவே இவற்றில் உராய்வு விசை (Friction) மிகக் குறைவாக இருக்கும். இது 'பறக்கும் இரயில்' என்றும் அழைக்கப்படுகிறது.
8. பாதுகாப்பு மற்றும் சேமிப்பு
காந்தங்களை எப்போதும் அவற்றின் வேரினத் துருவங்கள் ஒன்றை ஒன்று எதிர்நோக்கி இருக்குமாறு சோடிகளாக வைக்க வேண்டும்.
அலைபேசி, கணினி மற்றும் ஏடிஎம் கார்டுகளுக்கு அருகில் காந்தங்களை வைத்தால் அவை பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் ஏடிஎம் கார்டுகளில் தகவல்களைச் சேமிக்க காந்தப்பட்டைகள் (Magnetic strips) பயன்படுத்தப்படுகின்றன.
6-ஆம் வகுப்பு அறிவியல்: காந்தவியல்
6th Science: Magnetism (50 Bilingual Questions)
Comments
Post a Comment